வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
4வது என்ஐசிடிசி முதலீட்டாளர்கள் வட்டமேசை மாநாடு மும்பையில் நாளை நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
09 OCT 2022 11:06AM by PIB Chennai
இந்தியாவின் நிதித் தலைநகரில் முதலீட்டாளர்களின் வட்டமேசை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. மஹாராஷ்ட்ர தொழில் நகர நிறுவனம் ஏற்பாடு செயதுள்ள 4வது என்ஐசிடிசி முதலீட்டாளர்கள் வட்டமேசை மாநாடு மும்பையில் நாளை (அக்ட்டோபர் 10, 2022) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய முதலீட்டாளர்கள் தவிர, மஹாராஷ்ட்ர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மஹாராஷ்ட்ர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த், பல்வேறு நாடுகளின் துணைத்தூதர்கள் மற்றும் மஹாராஷ்ட்ர அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். முதலீட்டாளர்கள் வட்டமேசை மாநாடு ஏற்கெனவே தில்லி, கொச்சி மற்றும் அகமதாபாதில் நடத்தப்பட்டது. இந்த 4வது மாநாடு, தேசிய தொழில்துறை போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டு, இந்தியா முழுவதும் வரவிருக்கும் பசுமையான தொழில் நகரங்களின் வளர்ச்சியை எடுத்துரைக்கும்.
தற்போது, மகாராஷ்டிராவில் ஔரங்காபாத், ராய்காட், சதாரா, நாக்பூர் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற நான்கு பசுமையான தொழில் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநாடு பங்குதாரர்களிடையே அர்த்தமுள்ள விவாதத்தை எளிதாக்கி முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு ஒத்துழைப்பு வாய்ப்புகளை அடையாளம் காண உதவும்.
******
(रिलीज़ आईडी: 1866276)
आगंतुक पटल : 213