இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரு பார்வை: ஸ்ரீஹரி நடராஜ் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் வெற்றி பெற்று ஆறாவது தங்கம் வென்றார்
Posted On:
09 OCT 2022 10:38AM by PIB Chennai
ராஜ்கோட்டில் உள்ள சர்தார் படேல் அக்வாட்டிக்ஸ் வளாகத்தில் நடந்த ஆடவருக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டியில் ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்று, தேசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஒலிம்பியன் ஸ்ரீஹரி நடராஜ் (கர்நாடகா) தனது பதக்க வேட்டையை முடித்துக் கொண்டார்.
அவர் 50.41 வினாடிகளில் பெற்ற வெற்றியானது, தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிய சாதனையாகும்.
ஒரு வாரகாலமாக மூத்தவீரர் சஜன் பிரகாஷ் பெற்ற (கேரளா) ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பார்த்த ஸ்ரீஹரி நடராஜ், இன்று (09-10-2022), அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெற்றியைப் பெற்றார். சஜன் பிரகாஷ் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
ஸ்ரீஹரி, இரண்டு ப்ரீஸ்டைல் ஸ்பிரிண்ட் தங்கப் பதக்கங்களைப் பெற்று, இரண்டு பேக் ஸ்ட்ரோக் பட்டங்களைச் சேர்த்து, பதக்கப்பட்டியலில் கர்நாடக ரிலே அணிகளுக்கு இரண்டு தங்கம் என்ற நிலைக்கு உயர்த்தினார்.
எஸ்பி லிகித் இன்று (09-10-2022) 100 மீட்டர் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று ஆண்களுக்கான பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டிகளை க்ளீன் ஸ்வீப் செய்து, பதக்கப்பட்டியலில் தங்கம் 44 ஆக அதிகரிக்க வழி வகுத்தார். பதக்கப்பட்டியலில் 30 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் ஹரியானா உள்ளது.
பதக்கப்பட்டியலில் ஹரியானாவுக்கு சவால் விடும் நிலையில், மஹாராஷ்டிரா தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்கள் குறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
23 தங்கப் பதக்கங்களுடன் கர்நாடகா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 19 தங்கம்
அக்வாட்டிக்ஸ் போட்டிகளில் பெற்றதாகும்.
4x100 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டப் போட்டியில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரிவர்ஃபிரண்ட் விளையாட்டு வளாகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான சாஃப்ட் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குஜராத் ஆடவர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகளை நடத்தும் குஜராத் மாநிலம் இதுவரை இல்லாத வகையில் 11 தங்கப் பதக்கங்களை வென்றது.
தமிழ்நாடு வீராங்கனை எஸ் வைஷ்ணவி 134.22 புள்ளிகளுடன் பெண்களுக்கான கலை யோகாசனத்தில் தங்கம் வென்றார், மகாராஷ்டிரா ஜோடியான சாகுலி பன்சிலால் செலோகர் (127.68) மற்றும் பூர்வா ஸ்ரீராம் கினாரே (126.68) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனர்.
ராஜ்கோட்டில் உள்ள மேஜர் தயான் சந்த் ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் ஹாக்கியில், கர்நாடகா 11-2 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அரையிறுதியில் ஹரியானா அணியை வீழ்த்தியது.
வழக்கமான ஆட்டத்தில் த்ரில்லர் 1-1 என முடிவடைந்த பிறகு, பெனால்டி ஷூட் அவுட் மூலம் உத்தரபிரதேசம் மேற்கு வங்கத்தை வென்றது.
கடைசி கால் இறுதியில் ஜார்கண்ட் அணியை வீழ்த்திய மகாராஷ்டிராயுடன் உத்தரபிரதேச அணி மோதுகிறது.
**********
(Release ID: 1866204)
Visitor Counter : 234