குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதிப் பொருட்களை உலகளாவிய அளவில் எடுத்துச்செல்லும் வகையில் பொதுமக்கள் அந்த பொருட்களை வாங்கி ஊக்குவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
Posted On:
03 OCT 2022 5:15PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காதி ஃபெஸ்ட் - 2022 கண்காட்சியை மும்பையில் இன்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே தொடங்கி வைத்தார். இந்த பொருட்காட்சி நவம்பர் 1, 2022 வரை நடைபெறும்.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் காதி விழாவை நடத்தி வருகிறது. எனினும் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இம்முறை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் திரு நாராயண் ரானே, இது போன்ற கண்காட்சிகள் மூலமாக காதி மற்றும் கிராமத் தொழில் விற்பனையாளர்கள் சந்தையை நேரடியாக அடைய உதவுகிறது. "இது போன்ற நடவடிக்கைகளின் விளைவாக, 2021-22 ஆம் ஆண்டில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ரூ.257.02 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதியை பதிவு செய்தது", என்றார்.
"சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வார்தாவிலிருந்து தொடங்கி, நாட்டையும் சமுதாயத்தையும் தன்னிறைவு பெறச் செய்வதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார்" என்று திரு ரானே கூறினார். நமது பிரதமர் தற்சார்பு இந்தியாவை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார், அவருடைய முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘காதியிலிருந்து வேலைவாய்ப்பு’ என்ற மந்திரத்தை மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சர், மும்பையில் நடைபெறும் காதி கண்காட்சியைப் பார்வையிடவும், அதிக அளவில் வாங்கவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர், “பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மும்பை உள்ளது; மும்பை மக்கள் காதியை விளம்பரப்படுத்தினால், காதியை உலகளாவிய அளவில் நிறுவ முடியும்.
**************
(Release ID: 1864860)
Visitor Counter : 152