பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கடமைப் பாதையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாளை முதல் அக்டோபர் 2 வரை ஊட்டச்சத்து விழாவை நடத்துகிறது
Posted On:
29 SEP 2022 5:17PM by PIB Chennai
5-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தைக் கொண்டாடும் வகையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை புதுதில்லியில் உள்ள கடமைப்பாதையில் ஊட்டச்சத்து விழாவை நடத்துகிறது.
ஒட்டுமொத்த மக்களுக்கும், குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்ள வயதுக்கு ஏற்ற நல்ல சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு உணர்த்துவது இதன் நோக்கமாகும்.
குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில், விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், ஊட்டச்சத்து அணிவகுப்புகள், சுகாதார பரிசோதனை முகாம்கள், ஆரோக்கியமான உணவுக் கடைகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய செய்தியுடன் கூடிய விளையாட்டுகள் மற்றும் பிரதமருடன் ஒரு ரியாலிட்டி அடிப்படையிலான புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பையும் இது உள்ளடக்கும்.
மாலை 6:00 மணிக்கு ஊட்டச்சத்து விழா மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானியால் துவக்கி வைக்கப்படும்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் ஆற்றிய உரையின் போது, ஊட்டச் சத்து குறைபாடும், அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு, ஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்து வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஊட்டச்சத்து மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1863424
**************
(Release ID: 1863487)
Visitor Counter : 174