குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டுநலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

Posted On: 24 SEP 2022 2:43PM by PIB Chennai

குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று குடியரசு தலைவர் மாளிகையில், 2020-21-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார்.

5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர். ரமேசுக்கு, பல்கலைக்கழகம்/பிளஸ்டூ கவுன்சில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

யூனிட் திட்ட அலுவலர்கள் பிரிவில் மதுரை ஶ்ரீமீனாட்சி கலைக்கல்லூரிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயசீலன், மதுரை மெப்கோ சிலீக் பொறியியல் கல்லூரியின் வரதராஜன் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

Click here to see list of awardees Contact details

Click here to see list of awardees

***************


(Release ID: 1861933) Visitor Counter : 207