மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வின் (II)-2022-ன் முடிவு அறிவிப்பு
Posted On:
23 SEP 2022 5:06PM by PIB Chennai
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2022 செப்டம்பர் 04 அன்று நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வின் (II), 2022 முடிவுகளின் அடிப்படையில், 6658 விண்ணப்பதாரர்கள் அமைச்சகத்தின் சேவைத் தேர்வு வாரியத்தால் நடைபெறவுள்ள நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர். (i) டேராடூன் இந்தியன் மிலிட்டரி அகாடமியில், 155வது (DE) படிப்புக்கான சேர்க்கை (ii) இந்திய கடற்படை அகாடமி, எழிமலா, கேரளா (iii) விமானப்படை அகாடமி, ஹைதராபாத் (ப்ரீ-ஃப்ளையிங்) பயிற்சி வகுப்பு (214 எஃப்(பி)) ஆகியவை ஜூலை, 2023ல் தொடங்குகிறது (iv) ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, சென்னை 118வது எஸ்எஸ்சி (ஆண்கள்) (என்டி) (யுபிஎஸ்சி) படிப்பு, 32வது SSC பெண்கள் (தொழில்நுட்பம் அல்லாதது) (UPSC) படிப்புகள் 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.
பட்டியல்களில் காட்டப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களின் தேர்வும் தற்காலிகமானது. தேர்வில் சேருவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க, அவர்கள் வயது (பிறந்த தேதி), கல்வித் தகுதிகள், என்சிசி (சி) (இராணுவப் பிரிவு/சீனியர் டிவிஷன் ஏர் விங்/நேவல் விங்) போன்றவற்றிற்கான அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861757
**************
(Release ID: 1861815)