நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் பிரஜ் மேட்ரிக்சின் ஆர்&டி மையத்தை பார்வையிட்டார்

Posted On: 18 SEP 2022 4:30PM by PIB Chennai

உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடுகளில் ஆழமான கண்டுபிடிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும், எத்தனால் கலவையில் ஏற்படும் வளர்ச்சித் தடைகளை நீக்குவதற்கும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை திரு சுதன்ஷு பாண்டே, இந்திய உணவுக் கழகத்தின் குழுவுடன் இணைந்து பிரஜ் மேட்ரிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பெட்ரோலில் 10% எத்தனால் கலப்படத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த விஜயத்தின் போது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சந்தை அறிமுகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் செயலாளர் கலந்துரையாடினார். உயிரி எரிபொருட்களின் செயல்முறை தொழில்நுட்பத்தின் முழுமையான மதிப்பு சங்கிலி வளர்ச்சியையும் அவர்கள் கண்டனர்.

இந்த கார்பன் குறைந்த புதுமையான தொழில்நுட்பங்கள், எத்தனாலில் இருந்து 20% பெட்ரோல் தேவைகளை பூர்த்தி செய்து, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு  உதவுவதுடன், நாட்டிற்கான சிஓபி 26 இலக்குகளை அடைய உதவுவதுடன், நிகர ஜீரோ இலக்குகளை நோக்கி இந்தியா முன்னேற உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது நாட்டிற்கான அந்நியச் செலாவணியை ஆண்டுக்கு ரூ.30000 கோடி அளவுக்கு சேமிக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860383

 

*******



(Release ID: 1860409) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi