பாதுகாப்பு அமைச்சகம்
பன்னாட்டு கடற்படை பயிற்சி காக்கடுவில் பங்கேற்க ஐஎன்எஸ் சத்புராவும் பி-8 I கடல் ரோந்து விமானம் தாங்கி போர்க்கப்பலும் ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு சென்றுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2022 5:01PM by PIB Chennai
ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்படும் பன்னாட்டு கடற்படை பயிற்சி காக்கடுவில் பங்கேற்க ஐஎன்எஸ் சத்புராவும் பி-8 I கடல் ரோந்து விமானம் தாங்கி போர்க்கப்பலும் ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு 2022 செப்டம்பர் 12 அன்று சென்று சேர்ந்தன.
இரண்டுவார கால பயிற்சியில் 14 கடற்படைகளின் துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த கப்பல்களும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் பங்கேற்க உள்ளன. துறைமுகம் சார்ந்த பயிற்சியின்போது கப்பலின் சிப்பந்திகள் செயல்பாடு குறித்த கலந்துரையாடல்களிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1859022)
வருகையாளர் எண்ணிக்கை : 266