வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கத்தாருடன் புவிசார் குறியீடு பொருட்களுக்காக காணொலி காட்சி வாயிலான சந்திப்பிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 12 SEP 2022 3:37PM by PIB Chennai

இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமம் இணைந்து புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கான  காணொலி காட்சி வாயிலான சந்திப்பிற்கு அரசு ஏற்பாடு செய்தது.  இந்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் என 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டின் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா – கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

பின்னர் பேசிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு  ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும்  இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களான  பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858702

******


(Release ID: 1858740) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Hindi