சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல்

Posted On: 02 SEP 2022 6:41PM by PIB Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல் செய்தனர்.

 சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, 22.08.2022 சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூரைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை இவர்கள் பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 மற்றொரு சோதனையின் போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலை உயர்ந்த கற்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

 சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

***************


(Release ID: 1856388)
Read this release in: English