சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய முன்னாள் செய்தி இயக்குனர் திரு.வி.சங்கரன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்

Posted On: 02 SEP 2022 12:10PM by PIB Chennai

அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய முன்னாள் செய்தி இயக்குனர் திரு.வி.சங்கரன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74.

இவர் ஆர்என்ஐ(RNI), பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்திய வானொலி, மக்கள் தொடர்புத்துறை  (பாதுகாப்பு) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இலங்கை பிரச்சனையின்போது அங்கு செய்தியாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி செய்தியாளராக 10 ஆண்டுகளுக்கும் மேல் இவர் பணியாற்றியுள்ளார்.

பணி ஓய்வு பெற்ற பின்னரும், கொவிட் பெருந்தொற்று காலம் வரை செய்திப் பிரிவில் தற்காலிக செய்தி ஆசிரியராக தொடர்ந்து உதவி செய்து வந்தார்.  சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (01.09.2022) இரவு காலமானார். இவரது உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மாவட்டத்தில் அய்யனார்குளம் கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

***************

 


(Release ID: 1856233) Visitor Counter : 135


Read this release in: English