வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ட்ராகன் பழம் ஏற்றுமதியை அதிகரிக்க வாங்குவோர், விற்போர் சந்திப்புக்கு மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 19 AUG 2022 6:55PM by PIB Chennai

ட்ராகன் பழம் ஏற்றுமதியை அதிகரிக்க வாங்குவோர், விற்போர் சந்திப்புக்கு மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. பெங்களூருவில் உள்ள ஜிகேவிகே வளாகத்தில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகம், முதன்முறையாக இத்தகையை முன்முயற்சியை எடுத்துள்ளது.

இந்த சந்திப்பில் முக்கிய உரை நிகழ்த்திய ஆணையத்தின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, எதிர்காலத்தில் ஏற்றுமதியோடு, சம்பந்தப்பட்டவர்களுடன் கூடுதலாக கலந்துரையாடல் நடத்தப்படும் என்றார். இந்த சந்திப்பில் விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ் ராஜேந்திர பிரசாத் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853192

***************



(Release ID: 1853202) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi