பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

புதிய இந்தியாவை உருவாக்குவதில் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் பங்களித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 14 AUG 2022 3:39PM by PIB Chennai

மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் மன்மோகன் சிங், இந்தர் குமார் குஜ்ரால் ஆகிய இருவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய அதே பிரிவைச் சேர்ந்த அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது முரண்பாடு என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஜம்மு & காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த ஒழுங்கீனத்தை சரிசெய்த பிறகு, இப்போது ஜம்மு & காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம், மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட ஆகலாம் என அவர் தெரிவித்தார். 

ஜம்மு அருகே சர்வதேச எல்லைக்கு  அருகில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தான் அகதிகளின் பேரணியில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்தியப் பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பங்களித்து, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியாவின் இரண்டு பிரதமர்களான டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் இந்தர் குமார் குஜ்ரால் ஆகியோர் மேற்கு பாகிஸ்தானில் வசித்தவர்கள், முன்னாள் துணைப் பிரதமர் எல் கே அத்வானி கராச்சியைச் சேர்ந்தவர்.

 

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, சில குறுகிய மனப்பான்மை கொண்ட வர்களின் அரசியல் நலன்கள் மற்றும் 370 வது பிரிவின் பெயரால் நடந்த சூழ்ச்சிகளால், ஜம்மு & காஷ்மீரில் குடியேறத் தேர்ந்தெடுத்த பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் பொன்னான அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும், ஜம்மு & காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியின் கீழ், ஜம்மு & காஷ்மீர் போன்ற புறப் பகுதிகளின் ஆராயப்படாத திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் பல புதிய ஸ்டார்ட்-அப் முயற்சிகள், குறிப்பாக விவசாயத் துறையில், ஜம்மு & காஷ்மீரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

***************



(Release ID: 1851833) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi