ரெயில்வே அமைச்சகம்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மரியாதை

Posted On: 13 AUG 2022 6:35PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் விடுதலைப் போராட்ட  தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அகில இந்திய மோட்டார் சைக்கிள் பேரணியின் "கொடியேற்றம்" விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 6 பேரின் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சிவராம் ஹரி ராஜ்குருமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குதிராம் போஸ், ஆந்திராவைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு, அசாமில் இருந்து குஷால் கோன்வார், ஒரிசாவைச் சேர்ந்த லக்ஷ்மண் நாயக் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த  கோமரம் பீம் ஆகியோர் இந்த திய1கிகள் ஆவர். ரயில்வே துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை வளாகத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையால் ஏற்பாடு செய்யப்பட்ட 75 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய ஆர்பிஎஃப் மோட்டார் சைக்கிள் பேரணியை ரயில்வே அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார். தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களை அவர் கவுரவித்தார்.

நமது வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் அமிர்த காலத்தின் முடிவில், இந்தியாவுக்கான எதிர்கால மகிமைக்கான அடித்தளத்தை அமைத்து, அதன் மகிமையின் உச்சத்திற்கு நம் நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851574

 

******



(Release ID: 1851616) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Hindi