சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் புதுதில்லியிலுள்ள பண்டிட்.தீன்தயாள் உபாத்யாய சேவை நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்

Posted On: 12 AUG 2022 4:05PM by PIB Chennai

75-வது ஆண்டு சுதந்திரதின அமிர்தப் பெருவிழா மற்றும் இல்லம்தோறும் மூவண்ணக்கொடி, வீடு, வீடாக மூவண்ணக்கொடி இயக்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கான பண்டிட். தீன்தயாள் உபாத்யாய தேசிய நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் திட்டம் ஆகியவை இணைந்து 12.08.2022 அன்று புதுதில்லியில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர்.வீரேந்திர சிங் இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஏழை மாற்றுத்திறனாளிகள் 110 பேருக்கு உதவிகள் மற்றும் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

டாக்டர். வீரேந்திர குமார், பண்டிட். தீன்தயாள் உபாத்யாய சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கிய அவர், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.  அப்போது பேசிய அவர், செயற்கைக் கால்களை தயாரிப்பதில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், புதிய வழிமுறைகளை கையாளவும் பரிந்துரைந்தார். அவர் தனது உரையின்போது, வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது மூவண்ணக் கொடியை பறக்க விட்டு, மக்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில், அரசின் பிற துறைகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

***************

(Release ID: 1851249)



(Release ID: 1851311) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi