பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற, இந்தியா-வங்காளதேசமிடையேயான 4-வது வருடாந்திர ராணுவப் பேச்சுவார்த்தையில், இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர், ஆயுதப்படைப் பிரிவின் முதன்மை பணியாளர் அதிகாரி இணைந்து பங்கேற்பு
Posted On:
11 AUG 2022 4:39PM by PIB Chennai
இந்தியா-வங்காளதேசம் இடையே, 4-வது வருடாந்திர ராணுவப் பேச்சுவார்த்தை, இந்திய பாதுகாப்புத்துறை செயலளார் டாக்டர். அஜய் குமார் மற்றும் வங்காளதேச ஆயுதப்படைப் பிரிவின் முதன்மை பணியாளர் அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் ஆகியோர் தலைமையில் புதுதில்லியில், ஆகஸ்ட் 11 2022 அன்று நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கொவிட்-19 அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு வளர்ந்து வருவதாக அதிகாரிகள் திருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த பேச்சுவார்த்தையி்ன்போது, இருதரப்பு பயிற்சிகளை அதிகரிப்பது மற்றும் சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருதரப்பினரிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், ஆயுதப்படைகளிடையேயான ஈடுபாடுகளை மேலும் அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு தளவாடங்களுக்காக 500 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவதற்காக, இருநாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850924
***************
(Release ID: 1851019)
Visitor Counter : 179