மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
யோகா கல்வி
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2022 5:01PM by PIB Chennai
பல்கலைக்கழகங்களில் யோகா கல்வியை அளிப்பது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்க கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி பேராசிரியர் எச் ஆர் நாகேந்திரா தலைமையில் குழு ஒன்றை கல்வி அமைச்சகம் அமைத்தது. இக்குழு தமது அறிக்கையை 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடத்திட்டத்துடன் சமர்ப்பித்தது.
இதையடுத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் யோகா படிப்பை அங்கீகரித்து பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டது.
2019-20-ம் ஆண்டு உயர்கல்விக்கான இணையதளம் குறித்த அகில இந்திய கணக்கெடுப்பின் படி 131 பல்கலைக்கழகங்கள் யோகா தொடர்பான படிப்புகளை கற்பிக்கிறது.
இத்தகவலை மக்களவையில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849882
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1850034)
வருகையாளர் எண்ணிக்கை : 133