குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்துவதற்கான தொகுப்பு திட்டம்

Posted On: 08 AUG 2022 3:23PM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இவற்றுள், அவசரக் கடன் உதவித் திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் செல்லுபடியாகும் காலம் 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவின், பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான இலவசக் கடன் உதவியை எளிதாக்குகிறது.

கடன் உத்தரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்கவும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியை எளிதாக்கவும், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்சினைகளின்றி அதிகபட்சமாக ரூ.200 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த தகவலை, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணையமைச்சர் திரு.பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849802

***************



(Release ID: 1850027) Visitor Counter : 149


Read this release in: English , Urdu