பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முடிக்கப்பட்ட அல்லது நடைபெற்று கொண்டுள்ள எல்லை சாலை திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2022 3:02PM by PIB Chennai

எல்லை சாலைகள் அமைப்பானது, இந்திய ராணுவத்தால் அளிக்கப்படும் முன்னுரிமைகளின்படி, ஒரு மாநிலத்துக்கான அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் எல்லை சாலைகளை அமைத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், நிறைவேற்றப்பட்ட எல்லை சாலைகளின் பட்டியல் ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் 612.82 கிலோ மீட்டர் சாலை, 2018-19-ம் ஆண்டு 608.62 கிலோ மீட்டர் சாலை, 2019-20-ம் ஆண்டு 691.22 கிலோ மீட்டர் சாலை, 2020-21-ம் ஆண்டில் 940.64 கிலோ மீட்டர் சாலை, 2021-22-ம் ஆண்டில் 741.70 கிலோ மீட்டர் எல்லை சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், 6,195 கிலோ மீட்டர் எல்லை சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆயுதப் படையினர் தேவையான பகுதிகளுக்கு எளிதாக செல்வதற்கும், அவசரமான காலகட்டங்களில் துருப்பினரை விரைவாக ஒன்று திரட்டவும் இந்த சாலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தகவலை மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் திரு. அஜய் பட், திரு.பிரகாஷ் ஜவ்டேகரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849783

                                              ***************


(வெளியீட்டு அடையாள எண்: 1850023) வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu