குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இணைய வணிகத்தை சந்தைப்படுத்தும் தளம்
Posted On:
04 AUG 2022 12:59PM by PIB Chennai
தேசிய சிறுதொழில் கழகம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணையவழி பக்கம், நாட்டிலுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோரின் வணிகத்தை மேம்படுத்த, மின்சந்தைப்படுத்துதல் சேவையை எளிதாக்குகிறது.
இணையவழி பதிவு, இணையவழி அங்காடி மேலாண்மை, காட்சிப்படுத்தப்படும் பொருள்கள், சேவைகள், வாய்மொழி அடிப்படையிலான குத்தகை நடைமுறை, வணிக வர்த்தகத் தகவல்கள், ஒப்பந்த தகவல்கள் அளித்தல் போன்றவை இணைய பக்கத்தின் முக்கிய சேவைகளாகும். மேலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைச்சகத்தின்கீழ், ‘ekhadiindia.com’ இந்த என்ற இணைய பக்கத்தை நிறுவியது. இது, அதன் பங்கேற்பாளர்களுக்கு, இணைய வழி சந்தைப்படுத்துதலை எளிதாக்குகிறது. இந்த இணைய பக்கம், குறு நிறுவனங்களுக்கான புதிய வழிகளை காட்டுகிறது. மேலும், அதன் வாடிக்கையாளர்கள் பல்வேறு வழிமுறைகளில் தொடர்வதை அனுமதிக்கிறது. (இணையதளம், மின்னஞ்சல், நேரடி அழைப்புகள், வலைப்பதிவு போன்றவை)
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையை மேம்படுத்துவதற்காக, பிரதமரின் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், பாரம்பரிய தொழில்களை மறுசீரமைப்பதற்கான நிதியுதவி திட்டம், புதுமை, மற்றும் கிராமப்புற தொழில் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் உள்ளிட்டவை.
இந்த தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1848356)