புவி அறிவியல் அமைச்சகம்

வேளாண் வானிலை முன்கணிப்பு சேவை

Posted On: 03 AUG 2022 12:21PM by PIB Chennai

நாட்டில் விவசாய சமூகம் பயன் பெறும் வகையில் வேளாண் வானிலை ஆலோசனை சேவை மையத்தை இந்திய வானிலைத் துறை நடத்தி வருகிறது. இதன் மூலம் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வானிலை முன்கணிப்பு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் உள்ளிட்டவற்றில் உள்ள 130 வேளாண் வானிலை பிரிவுகள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வானிலை முன்கணிப்புக் குறித்த தகவல்களை தயாரித்து வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது அன்றாட வேளாண் பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்துகொள்ள முடியும்.

விவசாயிகளுக்கான இந்த தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகம், தூர்தர்ஷன், வானொலி, இணையதளம்,  குறுஞ்செய்தி  வாயிலாகவும் அளித்து வருகிறது. அத்துடன் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் மேக்தூத் செயலி வாயிலாகவும்,  விவசாயிகள் வானிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.  மேலும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கிசான் சுவிதா செயலி மூலமாகவும் வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.

தமிழ்நாடு, பீகார், சத்தீஷ்கர், குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேசம், நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட்  மாநில அரசுகளின்  மொபைல் செயலி  மற்றும் இணையதளங்களில்  வானிலை முன்கணிப்பு மற்றும் வேளாண் வானிலை ஆலோசனைகள்  இடம் பெறுகின்றன. இதன் மூலம் இம்மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.

இத்தகவலை மக்களவையில் மத்திய புவி அறிவியல் ஆணை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில்  அளித்த போது கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847741

 

***************



(Release ID: 1847763) Visitor Counter : 142


Read this release in: English , Urdu