தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதி

Posted On: 01 AUG 2022 2:50PM by PIB Chennai

பீடி, சினிமா, இரும்பு, தொழிற்சாலைகள் மற்றும் மாங்கனீஸ், சுண்ணாம்புக்கல், மைக்கா சுரங்க தொழிற்சாலைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தொழிலாளர் நல சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.  இதன் மூலம் நாடு முழுவதும் 10 மருத்துவமனைகள், 285 மருந்தகங்கள் வாயிலாக அந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

            அத்துடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் கேன்சர், காசநோய், இதயநோய், சிறுநீரக மாற்று சிகிச்சை, ஹெர்னியா உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சை செலவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

            இத்தகவலை மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846956

***************



(Release ID: 1846981) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Marathi