சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுரங்க விருது – நாடு முழுவதும் சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பதற்கான தேசிய விருது

प्रविष्टि तिथि: 27 JUL 2022 3:28PM by PIB Chennai

நாட்டில் சுரங்கத் தொழில் ஏலம், செயல் நடவடிக்கை ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் வகையில் தேசிய அளவிலான விருதை மத்திய சுரங்க அமைச்சகம் அளித்து வருகிறது. 3 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுக்கான தொகையில் முதல் பிரிவில் 3 கோடி ரூபாயும், இரண்டாவது பிரிவில் 2 கோடி ரூபாயும், மூன்றாவது பிரிவில் 1 கோடி ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. 2019-20, 2020-21 ஆம் ஆண்டிற்கான விருது 12.07.2022 அன்று நடைபெற்ற சுரங்க மற்றும் கனிமங்களின் ஆறாவது தேசிய மாநாட்டின் போது வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களுக்கு 18 கோடி ரூபாய் விருது தொகையாக அளிக்கப்பட்டது.

இத்தகவலை மக்களவையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரல்ஹத் ஜோஷி எழுத்துப் பூர்வமாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845347

***************


(रिलीज़ आईडी: 1845525) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu