ஆயுஷ்
ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருந்துகளை உற்பத்தி செய்யும் பதிவு பெற்ற நிறுவனங்கள்
Posted On:
26 JUL 2022 5:04PM by PIB Chennai
இந்தியாவில் ஆயுஷ் – 2020 என்னும் ஆயுஷ் அமைச்சகத்தின் வருடாந்திர புள்ளியியல் வெளியீட்டின் அடிப்படையில், 6,998 ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும் 576 யுனானி மருந்து நிறுவனங்களும் 340 ஹோமியோபதி மருந்து நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்து உற்பத்திக்கான உரிமங்களை வழங்கும் வகையில் அமைச்சகம், மருந்து விதிமுறைகளில் கடந்த ஆண்டு திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. எளிதில் வர்த்தகம் புரியும் வகையில், சிக்கல்களை குறைக்க இந்தத் திருத்தம் வகை செய்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகிய மருந்துகளை வேகமாக தயாரித்து வழங்க உரிமங்கள் வழங்குவதற்கான நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உரிமம் வழங்குவதற்கான கால அவகாசம், 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்
***************
(Release ID: 1845141)