தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகள் மற்றும் இளம்வயதுடையவர்கள் சுரங்கங்களில் பணியாளர்களாகவும், உதவியாளர்களாகவும் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 25 JUL 2022 4:48PM by PIB Chennai

கடந்த 2016 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை)  சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது.  அதன்படி, 14 வயதிற்குட்பட்டவர்கள் வேலைசெய்வதற்கும், 14 வயது முதல் 18 வயதுடையவர்களை கடினமான வேலைகளில் ஈடுபடுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. இச்சட்டம் 1.09.2016 முதல் அமலுக்கு வந்தது. இதை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. அதேபோல், குழந்தைகள் மற்றும் இளம் வயதுடையவர்கள்  சுரங்கங்களில் பணியாளர்களாகவும், உதவியாளர்களாகவும்  பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009ன் படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசுகள், கட்டாய ஆரம்பக்கல்வியை அருகாமையில்  உள்ள பள்ளிகளில் அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மக்களவையில், மத்திய தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெளி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844654

 

***************


(रिलीज़ आईडी: 1844685) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu