ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
Posted On:
22 JUL 2022 3:12PM by PIB Chennai
மருந்துத்துறையில் நாட்டுடன் நாடு ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி உள்பட 24 நாடுகளுடனும், உலக சுகாதார நிறுவனத்துடனும் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதே போல் பாரம்பரிய மருந்துகள் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்காக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் கல்வி சார்ந்த இருக்கைகள் அளிக்க 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்திய தாவரவியல் ஆய்வு மதிப்பீட்டின்படி, மகாராஷ்டிரா மாநிலம் உட்பட நாட்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மருந்து செடி வகைகள் உள்ளன.
மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843837
***************
(Release ID: 1844033)