ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு

Posted On: 22 JUL 2022 3:34PM by PIB Chennai

காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும். 

ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக  பாதுகாப்பை ரயில்வே பராமரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.  பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ரயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. குற்றச்செயல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 5,882 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடிப்படை மருத்துவ வசதிகளும் சில  ரயில்களில் செய்யப்பட்டு பயணிகளுக்கு உதவி வருகிறது.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

***************


(Release ID: 1843975) Visitor Counter : 211
Read this release in: English , Urdu