ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் நிலையங்கள், ரயில்களில் சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் மற்றும் முன்னேற்றம்

Posted On: 22 JUL 2022 3:31PM by PIB Chennai

ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி மேம்படுத்துவது ஒரு தொடர் நடைமுறையாகும்.  தற்போது ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்தின் அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில் நிலைய கட்டடங்களின் முகப்புகளை மாற்றியமைத்தல், குளிக்கும் வசதியுடன் ஓய்வு அறைகளை மேம்படுத்துதல், பெண்களுக்கு என தனி ஓய்வு அறைகளை அமைத்தல், கணினி வசதி, கட்டணக் கழிப்பறைகள், குளிர்நீர் வசதிகள்,  ரயில் நிலையங்களில் நுழைவு வாயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சாய்தள வசதிகள் செய்தல் போன்றவை இதில் அடங்கும். 

மேலும், ரயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள்   ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமையல் அறைகளை மேம்படுத்துதல், ஆன்லைன் மூலம், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கு தரமான, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், நாள் ஒன்றுக்கு சுமார் 9.30 லட்சம் லிட்டர் ரயில் நீர் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

***************


(Release ID: 1843972)
Read this release in: English , Urdu