பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கும் நீடிக்கவல்ல நகரங்கள் மற்றும் சமூகத்தை கட்டமைப்பதற்கும் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளது. அனைத்து பருவநிலைகளுக்கும் பொருத்தமான கொள்கைகளை வகுப்பதற்கு பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தை அரசு அமலாக்கி வருகிறது.
இந்த செயல்திட்டத்தில் சூரிய எரிசக்தி, விரிவாக்கப்பட்ட எரிசக்தி திறன், நீடிக்கவல்ல குடியிருப்பு, தண்ணீர், நீடிக்கவல்ல இமயமலைச் சூழல், பசுமை இந்தியா, நீடிக்கவல்ல வேளாண்மை, பருவநிலை மாற்றத்திற்கான உத்திவகுத்தல், ஞானம் ஆகிய 8 முக்கிய இயக்கங்கள் இடம் பெற்றுள்ளன. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டங்களின் அடிப்படையில் மாநில செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன.
தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம், அம்ருத் இயக்கம், பொலிவுறு நகரங்கள் இயக்கம், பிரதமரின் நகர்ப்புற வீ்ட்டுவசதித்திட்டம், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற மற்ற அமைச்சகங்களின் பல முக்கிய திட்டங்கள் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகள் 2-ல் அமலாக்கப்படுகின்றன.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843400
***************