உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உதான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
21 JUL 2022 2:49PM by PIB Chennai
நாட்டில் சிறிய நகரங்களிலும், விமானங்களை இயக்கும் வகையில், உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பயன்பாட்டில் இல்லாத மற்றும் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் மறுசீரமைப்புக்காக ரூ.4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் 21 நகரங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 8 விமான நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
உதான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர். 2-வது மற்றும் 3-ம் தர நகரங்களை இணைக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக்காக இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஓய்வுபெற்ற ஜென்ரல் வி கே சிங், எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843405
***************
(रिलीज़ आईडी: 1843541)
आगंतुक पटल : 243