கூட்டுறவு அமைச்சகம்
பதிவு செய்யப்பட்டு இயங்கும் பன்மாநில கூட்டுறவு சங்கங்கள்
Posted On:
20 JUL 2022 4:56PM by PIB Chennai
நாட்டில் பதிவு செய்யப்பட்டு வரும் பன்மாநில கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை, ஜூன் 30-ந் தேதி வரை 1508 இதில் 81 சங்கங்கள் செயல்படாமல் கலைக்கப்படும் நிலையில் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை 123 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 சங்கங்கள் கலைக்கப்படும் நிலையில் உள்ளன. புதுச்சேரியில் 5 சங்கங்கள் செயல்படுகின்றன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 655 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
பன் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, ஒவ்வொரு பன் மாநில கூட்டுறவு சங்கமும் ஒரு முக்கிய வணிக இடத்தைக் கொண்டிருக்க வேண்டும், அது சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாக இருக்கும். ஒரு சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி அதன் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1843129)
Visitor Counter : 327