தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

பாரத்நெட் திட்டத்தில் செலவு

Posted On: 20 JUL 2022 3:11PM by PIB Chennai

பாரத்நெட் திட்டம், நாட்டிலுள்ள சுமார் 2.6 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அகன்றஅலைவரிசை இணைப்பை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30.06.2021-ல், மத்திய அமைச்சரவை ஒப்புதலின்படி, கிராமப்பஞ்சாயத்துகளுக்கு அப்பால் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த திட்டத்தின் நோக்கம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்(2017-18 முதல் 2021-22 வரை) பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனம் (பிபிஎன்எல்) மூலம், பாரத் நெட் திட்டத்தின்கீழ், 31.03.2022 வரை மொத்தம் ரூ.22,676 கோடி வழங்கப்பட்டுள்ளது.  மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23-ன்படி, 2025-க்குள் அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழை மூலம் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843033
                                                                                     ***************



(Release ID: 1843092) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Manipuri