அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்தில் உயிரி பொருளாதாரம் முக்கியத்துவம் பெறும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
19 JUL 2022 5:22PM by PIB Chennai
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு உயிரி பொருளாதாரம் முக்கியமாக இருக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்தியாவின் உயிரி பொருளாதார அறிக்கை 2022 ஐ வெளியிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 80 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார், 2020 இல் 70.2 பில்லியன் டாலர்களை விட 14.1% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 2025 இல் 150 பில்லியன் டாலராகவும், 2030 இல் 300 பில்லியன் டாலராகவும் அது இருக்கும் என்று அவர் கூறினார்.
உயிரி தொழில்நுட்பத் துறையின் அனைத்து பங்குதாரர்களும், குறிப்பாக தொழில்துறை, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர் ஆகிய அனைவரும் இந்த லட்சிய இலக்கை அடைய கூட்டாக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பயோடெக் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 50ல் இருந்து 5,300 ஆக உயர்ந்துள்ளது, இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் முன்னுரிமை காரணமாகும் என்று கூறினார். இது 2025-க்குள் இருமடங்காக அதிகரித்து 10,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842730
***************
(Release ID: 1842837)
Visitor Counter : 459