சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட கடன்கள்

प्रविष्टि तिथि: 19 JUL 2022 4:19PM by PIB Chennai

ஏழ்மையான ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த 14,48,790 பேருக்கு இதுநாள் வரை தேசிய ஷெட்யூல்டு வகுப்பு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமும் ஏழ்மையான, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 30,69,427  பேருக்கு இதுநாள் வரை  தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

1989-90 முதல் 30.06.2022 வரை தேசிய ஷெட்யூல்டு வகுப்பு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ரூ.5779.06 கோடி கடன் வழங்கியுள்ளது. 1992-93 முதல் 06.07.2022 வரை ரூ.6180.82 கோடி  தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் கடன் வழங்கியுள்ளது.

 இதில் தமிழ்நாட்டிற்கு 64,465 ஷெட்யூடு வகுப்பு பயனாளிகளுக்கு ரூ. 46.641.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ரூ.39,233.83 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 8,61,842 பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1,048.88 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு 2173 ஷெட்யூடு வகுப்பு பயனாளிகளுக்கு ரூ. 1631.83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ரூ.1320.20 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.  இதே போல் 17,317 பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.45.97 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842696

***************


(रिलीज़ आईडी: 1842731) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri