மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய அடுக்கு அறிவாற்றல் பரிமாற்றம் 2022 நிறைவு
Posted On:
10 JUL 2022 3:25PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜுலை 7 -9, 2022 வரை, ‘இந்திய அடுக்கு அறிவாற்றல் பரிமாற்றம் 2022‘ எனும் தலைப்பிலான மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘நகர்ப்புற அடுக்கு‘ , ‘மின்னணு வணிகத்திற்கான தொழில்நுட்ப அடுக்கு‘ மற்றும் ‘விண்வெளி தொழில்நுட்ப அடுக்கு‘ ஆகிய மூன்று முக்கியத் தலைப்புகளிலான அமர்வுகள் மற்றும் ஜுலை 9, 2022 அன்று நடைபெற்ற நிறைவு விழாவுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நகர்ப்புற அடுக்கு
நிகழ்ச்சியின் முதல் அமர்வாக நடைபெற்ற நகர்ப்புற அடுக்கு நிகழ்ச்சியில், வெள்ள எச்சரிக்கை (சென்னை) ஏற்கத்தக்க போக்குவரத்து விளக்குகள் (அகர்தலா), மேம்பட்ட திடக்கழிவு சேகரிப்பு(வாரணாசி), பல்வகைப் போக்குவரத்து (சூரத்), பாதுகாப்பான வழித்தடம் மற்றும் இடங்கள்(புனே) மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரத்துடன் பேருந்தில் இடம்பிடிப்பது(சூரத்) உட்பட 18 நகரங்களின் வெற்றிக் கதைகளை, தக்க உதாரணத்துடன், இந்திய நகர்ப்புற தரவு பரிமாற்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இந்தர் கோபால் விளக்கிக் கூறினார்.
இதேபோன்று, ‘மின்னணு வணிகத்திற்கான தொழில்நுட்ப அடுக்கு‘ மற்றும் ‘விண்வெளி தொழில்நுட்ப அடுக்கு‘ ஆகிய அமர்வுகளிலும், பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840569
*******
(Release ID: 1840617)
Visitor Counter : 236