அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சாத்தியமான ஸ்டார்ட்-அப்களை அணுகிஅவர்களுக்கு ஆதரவளிக்குமாறு  மத்தியஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

Posted On: 08 JUL 2022 5:04PM by PIB Chennai

சாதிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்டார்ட்-அப்களை அணுகி அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் BIRAC உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறை தீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கேட்டுக் கொண்டார்

உ.பி மாநிலம்,  மொரதாபாத்தில் "இன்ஸ்பைர் இன் இன்ஸ்பயர்டு ரிசர்ச்" திட்டப் பயனாளிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதுமையான இளம் உள்ளங்கள் மற்றும் சாத்தியமான ஸ்டார்ட்-அப்களுக்காக நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய வாய்ப்பை வழங்க  அழைப்பு விடுத்தார். 

இந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' பற்றிக் குறிப்பிட்டு, அதில் மோடி, "இன்று இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்தும் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றனர். இந்தியாவில், புதுமையான யோசனை உள்ளவர் செல்வத்தை உருவாக்க முடியும்” என்று கூறியதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.   முக்கியமாக தென் மாநிலங்களில் மட்டுமே இருந்த ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பில் உத்தரப் பிரதேசம் வேகமாக முன்னேறி வருவதாக அவர் திருப்தி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840128  

***************



(Release ID: 1840187) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Hindi