சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
34.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் 1.55 கோடி ரூபாய் மதிப்பிலான 24 கேரட் 3.35 கிலோ எடையிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்-4 பயணிகள் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2022 5:21PM by PIB Chennai
3.7.2022 அன்று கிடைத்த தகவலின்படி, சென்னையிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா செல்லவிருந்த கடலூரைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் 34.23 லட்சம் ரூபாய் மதிப்புடைய 339 சவுதி ரியால் கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் வெளிநாட்டு கரன்சிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
4.7.2022 அன்று கிடைத்த தகவலின்படி, மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய கைப்பையில் 3 பண்டல்களில் வெளிநாட்டைச் சேர்ந்த தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 855 கிராம் எடையிலான இதன் மதிப்பு 39 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.
5.7.2022 அன்று கிடைத்த தகவலின்படி, பாங்காங்கில் இருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது சபிக், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மிர்சாத் அலி ஆகிய 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 24 கேரட்டிலான, 2.5 கிலோகிராம் எடையிலான 1.16 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக்கட்டிகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகவலை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் திரு வி. பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1839634)
வருகையாளர் எண்ணிக்கை : 167