அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் கதிரியக்க ஒளியை புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக மாற்றும்

Posted On: 05 JUL 2022 1:02PM by PIB Chennai

வெப்பத்தை வெளியிடுகிற கதிரியக்க ஒளியை மாற்றியமைக்கின்ற புதிய பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மற்றும் வெப்பசக்தியை பயன்படுத்தும் உயர்திறன் கொண்டதாக இது இருக்கும்.

மின்சார உற்பத்தி, தொலைத்தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து தொழில்நுட்பங்கள், உணர்வுக்கருவிகள், சுகாதார கவனிப்பு சேவைகள் போன்றவற்றுக்கு பயன்படத்தக்க, புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரமாக மின்காந்தவியல் அலைகள் இருக்கின்றன. இத்தகைய அலைகளை உயர்தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி துல்லியத்தன்மை உடையதாக விஞ்ஞானிகள் மாற்றமுடியும். தனித்தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி இதன் அளவு மனித ரோமத்தை விட ஆயிரம் மடங்கு  சிறியதாக இருக்கும்.  இருப்பினும் இதனை கண்டறிவதும், மாற்றியமைப்பதும் சிரமம் என்பதால்,அனைத்து ஒளி அலைகளையும் குறிப்பாக கதிரியக்க ஒளியை எளிதாக பயன்படுத்த முடியாது. 

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக எஸ்சிஎன் (single-crystalline scandium nitride) என்றழைக்கப்படும் புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தை தவிர,  இந்திய அறிவியல் கல்விக்கழகத்தைச் சேர்ந்த  நானோ அறிவியல் மற்றும் பொறியியல்  மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், சிட்னி பல்கலைக்கழகமும், இந்த ஆய்வில் பங்கேற்றன. இந்த ஆய்வு பற்றிய  விவரம் நானோ லெட்டர்ஸ் எனப்படும் அறிவியல் இதழில் அண்மையில்  வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839314

***************



(Release ID: 1839347) Visitor Counter : 260


Read this release in: English , Urdu , Marathi , Hindi