கூட்டுறவு அமைச்சகம்
100வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மக்களுக்கு வாழ்த்து
Posted On:
02 JUL 2022 4:07PM by PIB Chennai
100வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திரு அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 100 வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் கூட்டுறவு என்ற எண்ணத்தை வலுப்படுத்த அயராது உழைத்த அனைத்து சிறந்த மனிதர்களுக்கும் தமது மரியாதையை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், கூட்டுறவுத் துறையின் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பே சிறந்த வழி என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கூட்டுறவு அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து இந்தத் துறையை மேலும் சக்திவாய்ந்ததாகவும், நவீனமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1838877)
Visitor Counter : 196