நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான பொதுக்கடன் மேலாண்மை அறிக்கை

Posted On: 30 JUN 2022 1:56PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் கீழுள்ள பொதுக்கடன் மேலாண்மைப் பிரிவு, பட்ஜெட் பிரிவு இணைந்து, 2010 ஏப்ரல் - 2011 ஜூன் (முதல் காலாண்டு) முதல், பொதுக்கடன் மேலாண்மை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தற்போது, ஜனவரி-மார்ச் காலாண்டின் (2022-ம் நிதியாண்டின் 4-ம் காலாண்டு) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022-ம் நிதியாண்டில், 4-வது காலாண்டின்போது, மத்திய அரசு பங்கு பத்திரங்கள் மூலம் ரூ.1,37,025 கோடி பணத்தை திரட்டியது. இது, 2021 நிதியாண்டின் 4-வது காலாண்டில், ரூ.3,30,340 கோடியாக இருந்தது. அதேசமயம், ரூ.49,721.87 கோடியை திருப்பி செலுத்தியது. 2022-வது நிதியாண்டின், 3-ம் காலாண்டில் 6.63 சதவீதமாக இருந்த நிலையில்,  4-ம் காலாண்டில் 6.66 சதவீதமாக கடின நிலையில் இருந்தது. புதிதாக வெளியிடப்பட்ட பங்கு பத்திரங்களின் சராசரியான முதிர்வு, 2022 நிதியாண்டு, 3-ம் காலாண்டில் 16.88 என்ற அளவில் இருந்தது. இது 2022-ம் நிதியாண்டு. 4-வது காலாண்டில், 56 என்ற அளவில் அதிகரித்திருந்தது. மத்திய அரசு பண மேலாண்மை மசோதாக்கள் மூலம் 2022 ஜனவரி-மார்ச் வரை எந்த தொகையையும் திரட்டவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி, காலாண்டில், அரசாங்கப் பத்திரங்களுக்கான திறந்த சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பணப்புழக்கத்தை சரி செய்யும் வசதியின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் தினசரி நிகர பணப்புழக்கம், விளிம்புநிலை வசதி மற்றும் பணப்புழக்க வசதி ஆகியவை, காலாண்டில் ரூ.6,44,100.99 கோடியாக இருந்தது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838185    

***************


(Release ID: 1838308) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi