பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
29 JUN 2022 2:29PM by PIB Chennai
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் பி எஸ் ராஜூ, பாதுகாப்பு கணக்குத்துறையின் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு ரஜ்னீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருநாள் மாநாட்டில் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்கு துறையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அக்னிபாத் திட்டத்தை குறித்த நேரத்தில் அமல்படுத்துவது மற்றும் அக்னி வீரர்களுக்கான சம்பளம் மற்றும் படி குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு கணக்கு துறையின் தலைமை கட்டுப்பாட்டாளர் ராணுவ தரப்பில் இருந்து தேவைப்படும் ஆதரவு குறித்து குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837877
***************
(Release ID: 1838022)
Visitor Counter : 263