புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்று வரும் ஐநா கடல்சார் மாநாட்டின் இடையே மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நார்வே நாட்டின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு எஸ்பென் பார்த் எய்டுடன் பரஸ்பரம் இருதரப்பு விவகாரம் குறித்து விவாதித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUN 2022 1:27PM by PIB Chennai

 போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்று வரும் ஐநா கடல்சார் மாநாட்டின் இடையே மத்திய புவி அறிவியல்துறை  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நார்வே நாட்டின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு எஸ்பென் பார்த் எய்டுடன்  பரஸ்பரம் இருதரப்பு பல்வேறு விவகாரம் குறித்து விவாதித்தார்.

 கடந்த வாரம் புதுதில்லியில் நீலப்பொருளாதாரம் தொடர்பாக இந்தியாவுக்கான நார்வே தூதர் திரு ஹான்ஸ் ஜேக்கப் ஃபிரைடன் லுன்ட், மத்திய புவி அறிவியல்துறை செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் இடையே 5-வது இந்தியா-நார்வே சிறப்பு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் கடல்சார் தொழிற்சாலைகளை இணைத்தலுக்கான வழிவகைகளுக்கு சிறப்பு நடவடிக்கைகள் குழு ஒப்புகொண்டது.  பசுமை கடல்சார், நீடித்த கடல்சார் மேலாண்மை, ஆழ்கடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மேலும் ஒத்துழைப்பை கண்டறிவதற்கும் இருநாடுகளும் ஒப்புகொண்டுள்ளன.

 ஐந்தாவது இந்தியா-நார்வே இடையேயான சிறப்பு நடவடிக்கை குழு இதுவரை மேற்கொண்டுள்ள  பணிகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங்கும், திரு எஸ்பென் பார்த் எய்டும் மனநிறைவு தெரிவித்தனர். ஒருங்கிணைந்த கடல்சார் மேலாண்மை, கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு, கடலை அடிப்படையாக கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்தும் இருதரப்பினரும் மறுஆய்வு செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837856

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1837918) வருகையாளர் எண்ணிக்கை : 243
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi