கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

2047-ம் ஆண்டுக்குள் பெரிய துறைமுகங்களாக மாறுவதற்கு சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு அனைத்து துறைமுகங்களையும் திரு.சர்பானந்த சோனோவல் கேட்டு கொண்டார்

Posted On: 28 JUN 2022 4:31PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து துறையின் அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவல் தலைமையில் நடைபெற்ற, துறைமுகங்கள், கப்பல் கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் 3 நாள் கருத்தரங்கம் முக்கிய முடிவுகளுடன் நிறைவு பெற்றது. இந்தியாவின் நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த யோசனைகள் மற்றும் புதிய வழிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்றது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து துறையின் இணையமைச்சர் திரு.ஸ்ரீபத் யசோ  நாயக் மற்றும் திரு.சாந்தனு தாக்கூர் இணைந்து நடத்திய 3 நாள் கருத்தரங்கில், அனைத்து பெரிய துறைமுகங்களின் தலைவர்கள், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவல், இந்தியாவின் நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்த, வளர்ச்சியடைய செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிப்பூண்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், 2047-ம் ஆண்டுக்குள், அனைத்து துறைமுகங்களும் பெரிய முகங்களாக மாறுவதற்காக திட்டங்களை செயல்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த கருத்தரங்கில், சரக்குப் பெட்டகங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்த சிறப்பு வசதி, கப்பல் போக்குவரத்து மேலாண்மை, மாலுமிகளுக்கான 5ஜி தொழில்நுட்ப சேவை, மேற்பார்வை கட்டுப்பாடு, பசுமைக் கிடங்கு அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837604

***************



(Release ID: 1837670) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Hindi