பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எகிப்து விமானப்படையுடனான நடைமுறை உத்தி தலைமைத்துவ நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கிறது

Posted On: 24 JUN 2022 6:35PM by PIB Chennai

எகிப்தில் (கெய்ரோ மேற்கு விமானப்படை தளத்தில்) ஜூன் 24 முதல் ஜூலை 22 வரை எகிப்து விமானப்படை ஆயுதப்பள்ளி வளாகத்தில் நடைமுறை உத்தி தலைமைத்துவ நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை பங்கேற்க உள்ளது. இதில் மூன்று சூ-30 எம்கேஐ விமானம், இரண்டு சி -17 விமானம் ஆகியவற்றுடன் 57 இந்திய விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த பயிற்சி இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாகும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூ-30 எம்கேஐ விமானத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836804

                  ***************(Release ID: 1836823) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi