சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை வருமான வரி அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் – 2022 கொண்டாட்டம்

Posted On: 21 JUN 2022 7:01PM by PIB Chennai

‘சர்வதேச யோகா தினம்’ 21.06.2022 அன்று திரு. ரா. ரவிச்சந்திரன், வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி), தலைமையில், ‘ஆயக்கர் பவன்’, எண்.121, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னையில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை வருமான வரித்துறையைச் சேர்ந்த 350 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். யோகா ஆசிரியர் டாக்டர் விக்ரம் சீனிவாசன் யோகா அமர்வை நடத்தினார்.

கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, ஊட்டி, ஓசூர், பொள்ளாச்சி, வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 26 இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் இதே போன்ற நிகழ்வுகள் வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)யின் சார்பாக நடத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையின் 1050 அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

                             

                             

                              

                                        ****


(Release ID: 1836033) Visitor Counter : 151
Read this release in: English