சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மேம்பாட்டுக் கல்வி (Development Studies), ஆங்கிலக் கல்வி (English Studies), பொருளாதாரம் (Economics) ஆகிய மூன்று பிரிவுகளில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்பு, 2023-24 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த ஐஐடி மெட்ராஸ் திட்டம்.

Posted On: 21 JUN 2022 2:01PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையால் (Department of Humanities and Social Sciences) புதிய எம்.படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளனஅதிகளவிலான மாணவர்களை ஈடுபடுத்துவதும்விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும்தான் இதன் நோக்கமாகும்.

மேம்பாட்டுக் கல்வி (Development Studies), ஆங்கிலக் கல்வி (English Studies) ஆகியவை தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.படிப்புகளாக இருந்து வருகின்றனஇதற்கு பதிலாக பொருளாதாரப் (Economics) பாடத்தையும் எம்.படிப்பில் இணைத்துஇவை மூன்றையும் இரண்டாண்டு எம்.படிப்புக்கான பாடப் பிரிவுகளாக விரிவுபடுத்த இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளதுஇந்தப் பாடப்பிரிவுகள் 2023-ம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 25 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்மிகையிடங்கள் அடிப்படையில் சர்வதேச மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள்விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மார்ச்/ஏப்ரல் 2023-ல் தொடங்கப்பட்டுஜூலை 2023-ல் வகுப்புகள் ஆரம்பமாகும். HSEE தேர்வுக்கு பதிலாகவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இரண்டாண்டு எம்.படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சான்றுகள் அடிப்படையிலான கொள்கைப் பகுப்பாய்வுகள்சமூகப் பொருளாதார மேம்பாட்டை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்குதரவு அறிவியல் மற்றும் நிர்வாகம்பருவநிலை மாற்றம்நிலைத்தன்மைநகரமயமாக்கல் போன்ற தற்காலத்து பிரச்சனைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தனித்துவ அம்சங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளன.

புத்தாக்க பொருளாதாரம் (Economics of Innovation), நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு (Urban Planning and Development), சுகாதாரக் கொள்கை (Health Policy), சுற்றுச்சூழல் மானுடவியல் (Environmental Humanites), பருவநிலைப் பொருளாதாரம் (Climate Economics), தொழில்நுட்பம் மற்றும் கொள்கை (Technology and Policy), கணக்கீட்டு மொழியியல் (Computational Linguistics) போன்ற தற்காலத்திற்கு தேவைப்படும் பாடங்களை உள்ளடக்கியதாக எம்.படிப்பின் பாடப்பிரிவுகள் சீரமைக்கப்படும்.

----------


(Release ID: 1835842) Visitor Counter : 116
Read this release in: English