குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
‘ஸ்வதா’- காதியில் ஆரோக்கிய உடைகள் தொகுப்பு அறிமுகம்
Posted On:
20 JUN 2022 10:43AM by PIB Chennai
நாளை சர்வதேச யோகா தினத்தின் எட்டாவது ஆண்டினை நாளை நாம் கொண்டாட இருக்கும் தருணத்தில் காதி ‘ஸ்வதா’ எனும் ஆரோக்கிய உடைகள் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. அதர்வ வேதத்தின்படி,, ‘ஸ்வதா’ என்றால் எளிமை, சவுகரியம் அல்லது சுகம் என்று பொருள்படும், இவையே இந்த ஆடை தொகுப்பின் பண்புகளாகும்.
இந்த தொகுப்பில் இருந்து சில ஆடைகள் யோகா பயிற்சியாளர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் அணிந்து, அவர்களின் கருத்துக்களை பகிர்வதற்காக அளிக்கப்பட்டது.
அகண்ட தையல் பொருத்தப்பட்ட தோள்பட்டை, மேல் உடையின் மையப் பின்புறத்தில் பெட்டி மடிப்பு, தாழ்வான கவட்டை தையல், நீட்சிநிலை பயிற்சி மற்றும் கூடுதல் வசதிக்காக சுற்றி அணியும் வகையிலான கீழாடை ஆகியவை ஆரோக்கிய உடைகள் தொகுப்பின் சிறப்பம்சங்கள் ஆகும்.
சமூக ஆர்வலர், ராமன் மகசேசே விருது வென்றவர் மற்றும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் டாக்டர் கிரண் பேடி, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காதிக்கான சிறப்பு மையத்திற்குச் சென்று ஆடை தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளித்து வடிவமைப்பாளர்களுடன் உரையாடினார்.
ஆரோக்கிய ஆடைகள் தொகுப்பான ‘ஸ்வதா’, மன உறுதி மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளை வலியுறுத்துகிறது. இந்த ஆடை தொகுப்பு அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1835451)
Visitor Counter : 248