அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில்கள் கண்காட்சி-2022
Posted On:
08 JUN 2022 1:09PM by PIB Chennai
உயிரி தொழில்நுட்பத்துறை தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பின் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையிலும், இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறையை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை செயல்படுத்தும் விதமாகவும், தில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில், நாளை 2022 ஜுன் 9-10 ஆகிய தேதிகளில், உயிரி தொழில்நுட்பத்துறையில் புதிய தொழில்கள் தொடர்பான கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில், உயிரி தொழில்நுட்பத்துறை தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்ற 75 புதிய தொழில்கள், 75 சிறப்பு உயிரி தொழில்நுட்பத்துறை புதிய தொழில்கள், 21 தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் வெற்றி பெற்ற 50 புதிய தொழில்கள், உயிரி தொழில்நுட்பத்துறை தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகள் மற்றும் உள்நாடு மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் தொடங்கப்பட்ட புதிய தொழில்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும். இந்த கண்காட்சி ஜுன் 8-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தொடங்கி ஜுன் 10-ம் தேதி காலை 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832055
***************
(Release ID: 1832099)
Visitor Counter : 223