தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
Posted On:
05 JUN 2022 3:51PM by PIB Chennai
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே மற்றும் பொதுச் செயலாளர் திரு உமேஷ் சின்ஹா, தலைமை இயக்குநர் திரு தர்மேந்திர ஷர்மா மற்றும் மூத்த அதிகாரிகள் இன்று புதுதில்லி இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். தேர்தல்களின் போது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட பல்வேறு சூழலுக்கு உகந்த முயற்சிகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டதுடன், கண்காட்சியும் தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே, சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்தல் மேலாண்மை நடைமுறைகளுக்கு, குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் என்பது நமது அணுகுமுறையின் ஒருங்கிணைந்த குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுவது அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினமானது 'இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது' மற்றும் "ஒரே ஒரு பூமி" என்ற பொருத்தமான முழக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. வாக்காளர்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதி போன்ற பல்வேறு செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற முன்முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020-ன் போது, மேற்கொள்ளப்பட்ட உயிரியல் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான நுணுக்கமான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை திரு பாண்டே பாராட்டினார்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யுமாறு தேர்தல் ஆணையம் அதன் அனைத்து மாநில தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி 'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை' தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831312
**************
(Release ID: 1831343)
Visitor Counter : 212