பாதுகாப்பு அமைச்சகம்

ஐஎன்ஏஎஸ் 325 இயக்கிவைக்கப்பட்டது

Posted On: 31 MAY 2022 6:30PM by PIB Chennai

போர்ட்பிளேரில் 2022 மே 31 அன்று ஐஎன்எஸ் உத்க்ரோஷில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் அந்தமான் நிக்கோபார் பிரிவின் தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் அஜய் சிங், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே III-ஐ இயக்கும் இந்திய கப்பற்படையின் விமானப்பிரிவு (ஐஎன்ஏஎஸ்) 325-ஐ இந்திய கப்பற்படையில் இணைத்தார். புதிதாக சேர்க்கப்பட்ட இந்த போர் விமானம் முதல் முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்தமான் தீவுகள் மீது பறந்து சென்றது. பின்னர் 2022 ஜனவரி 28-ல் இது அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவு இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்ட இரண்டாவது பிரிவாகும்.

நேற்றைய நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய லெப்டினென்ட் ஜென்ரல் அஜய் சிங் இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து ஐஎன்எஸ் உத்க்ரோஷை பாராட்டினார். அண்மைக்கால தேசிய நெருக்கடியின் போது இந்திய ராணுவத்தின் பங்களிப்பை பாராட்டிய அவர், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிவாரண நடவடிக்கைகள் உட்பட சமீப ஆண்டுகளில் ஏஎல்எச் ஆற்றிய சிறப்புமிக்க சேவையை எடுத்துரைத்தார்.

அதி நவீன பல்வகை பணிகளுக்கான ஹெலிகாப்டர் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டதாகும். இது தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இந்த பிராந்தியத்தின் கடல் சார் நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவின் ராணுவ ரீதியான இருப்பையும், வலுப்படுத்த இது உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விமானப் படைப்பிரிவுக்கு சேட்டக், யூஎச்-3எச், ஏஎல்எச் போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கி அனுபவம் பெற்றுள்ள கமாண்டர் அவினாஷ் குமார் சர்மா தலைமை ஏற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829952

***************



(Release ID: 1830215) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi